புதிதாகப் பிறந்த தனது குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்தும் ஒரு தந்தை, பதற்றத்தில் நடுங்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கும் அந்தத் தந்தையிடம், பெண் மருத்துவர் குழந்தையைக் கொடுக்க வருகிறார்.
ஆனால், குழந்தையைத் தூக்கினால் எங்கே கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்திலும் தயக்கத்திலும் அவர் வாங்க மறுக்கிறார். மருத்துவர் பலமுறை வற்புறுத்திய பிறகு, மிகுந்த ஜாக்கிரதையுடனும் அதே சமயம் அளவற்ற மகிழ்ச்சியுடனும் குழந்தையை அவர் கையில் வாங்கும் காட்சி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 146 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் வைரலாகியுள்ளது. “வலிமையான கைகள் கூட ஒரு சிறிய மகிழ்ச்சியைத் தூக்கும்போது நடுங்குகின்றன” என்ற வரிகளுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
“>
தந்தை என்ற புதிய பொறுப்பை ஏற்கும் ஒரு ஆணின் உண்மையான உணர்வுகளையும், அந்தத் தருணத்தின் அழகையும் இந்த வீடியோ பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
