தான் கனவு கண்ட கல்லூரியிலேயே, பி.டெக் படிக்க முடியாமல் இன்று பாதுகாப்புப் பணியாளராக (Security Guard) வேலை பார்க்கும் இளைஞர் ஒருவரின் உருக்கமான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பி.எஸ்சி 3டி அனிமேஷன் மற்றும் கேம் டிசைன் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அந்த இளைஞர், குடும்பத்தின் மோசமான பொருளாதாரச் சூழலால் தனது கனவைத் துறந்து, அதே கல்லூரியில் காவலராகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
3டி ஸ்டுடியோ மேக்ஸ் போன்ற மென்பொருட்களில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், விதி செய்த சதியால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடந்து செல்லும்போது, அவர்களைப் பார்த்துத் தானும் ஒரு மாணவனாக இருந்திருக்க வேண்டுமே என்று நினைத்து அவர் கண்ணீர் விடுவதாகக் கூறுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இவரின் துயரமான கதையைக் கேட்ட நெட்டிசன்கள், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அவர் மீண்டும் தனது கனவை நோக்கிப் பயணிக்க ஊக்கமளித்து வருகின்றனர்.
