கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நவநீத நகரில் பன்னீர்செல்வம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். நேற்று காலை பன்னீர்செல்வம் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைக்கு சென்றார். பின்னர் சைக்கிளை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் இறங்கி கால் கழுவ முயன்ற போது எதிர்பாராதவிதமாக பன்னீர்செல்வம் ஆற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.