தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், 12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வை நடத்த வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளில் வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வினாத்தாள் பதிவிறக்கத்தில் பிரச்சனை இருந்தால் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.