சென்னை, நொளம்பூரில், தங்க நகைக்காக 70 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து, நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு, 70 வயதான மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது, 65 வயது மதிக்கத்தக்க எழமலை என்பவர், மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர், மூதாட்டியை தாக்கி கொலை செய்தபின், அவர் அணிந்திருந்த கம்மலைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
மூதாட்டியின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், எழமலையைப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், எழுமலையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இக்கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
