நியூசிலாந்தில் இருந்து தனது பெற்றோருடன் சென்னைக்கு விடுமுறைக்காக வந்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியச் சிறுவன் ஒருவன், சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏழு வகையான உணவுகளைச் சாப்பிட்டதற்கான பில் தொகையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
பேபி கார்ன் மஞ்சூரியன், போண்டா, பனீர் மசாலா தோசை, இட்லி உள்ளிட்ட ஏழு உணவுகளுக்கு மொத்தமாக ₹1,502 மட்டுமே பில் வந்ததைக் கண்ட சிறுவன் வியப்படைந்தான். “நியூசிலாந்தில் இதேபோல மூன்று உணவு வகைகளைச் சாப்பிட்டாலே சுமார் 200 டாலர்கள் செலவாகும். ஆனால் இங்கே ஏழு உணவுகளுக்கு இவ்வளவு குறைவான பில்லா?” என்று அவன் ஆச்சரியத்துடன் பேசும் காட்சிகள், இந்தியாவில் உணவகங்களில் கிடைக்கும் மிக மலிவான விலை வெளிநாட்டு வளர்ந்த குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஆச்சரியத்தைத் தரும் என்பதைச் சுவாரஸ்யமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
