மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 100 ரூபாய் மதிப்பு நினைவு நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிடுவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 100 ரூபாய் நாணயத்தை வடிவமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் இதனை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.