நில மற்றும் சர்வே துறையின் துணை இயக்குனர் (டெபுடி டைரக்டர்) வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அதிகாரிகள் இந்த மெகா ரெய்டை நடத்தினர். சோதனையின் முடிவில் அங்கிருந்த சொத்து விபரங்களை பார்த்து அதிகாரிகளே மிரண்டு போயுள்ளனர்.

​அதிகாரியின் வீட்டில் இருந்து மட்டும் ரூபாய் 1.54 கோடி ரொக்கப் பணம், வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2.29 கோடி, மற்றும் ரூபாய் 5.04 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட் (FD) ஆவணங்கள் என மொத்தம் 8.87 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, சுமார் 1.3 கிலோ தங்கம் மற்றும் பல சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஏழை மக்களின் வரிப்பணத்தையும், நாட்டின் சொத்தையும் இப்படி முறைகேடாக கொள்ளையடித்த அரசு அதிகாரியின் இந்த விவகாரம் தற்பொழுது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.