அமெரிக்காவில் உள்ள கியூடி (QT) கடையில் தனது இரண்டு சிறு மகள்களை பெண்கள் கழிவறைக்கு அழைத்துச் சென்ற தந்தை ஒருவரை, அங்கிருந்த மற்றொரு நபர் தவறாகப் பேசி, போலீஸாரையும் வரவழைத்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிறுமிகளை தனியாக அனுப்பாமல், தந்தை கூடவே கூட்டிச் சென்றதை அந்த நபர் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த தந்தை தற்போது ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

​அங்கு வந்த போலீஸார், அந்த தந்தை மீது எந்த தப்பும் இல்லை என்பதை உணர்ந்து, அவருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, எந்தவொரு அவசர நிலையும் இல்லாத சூழலில், வீணாக போலீஸை அழைத்து அவர்களின் நேரத்தையும், அரசு நிர்வாக வளங்களையும் வீணடித்ததற்காக வம்புக்கு வந்த அந்த நபருக்கு போலீஸார் கடுமையான அபராதம் விதித்துள்ளனர். தவறு செய்யாத தந்தைக்கு ஆதரவாக போலீஸார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.