பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது எப்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ஏரி ஒன்றிற்கு படகு சவாரி செய்யச் சென்றுள்ளார். அங்கு இயற்கையான சூழலை ரசித்துக் கொண்டே அவர் படகில் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக அவரது குழந்தை கையில் இருந்த ஐபோனை வாங்கியுள்ளது.

​அந்த குழந்தை, மொபைலை வாங்கிய அடுத்த நொடியே சற்றும் யோசிக்காமல் அப்படியே தண்ணீரில் தூக்கி வீசியுள்ளது. இதைப்பார்த்து அந்த தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த வேடிக்கையான மற்றும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.