அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு, அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது அபார புத்திசாலித்தனத்தால் செம ஆப்பு வைத்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அந்த கடைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள் அங்குள்ள பொருட்களை திருட முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர் பயந்து ஓடாமல் அல்லது அவர்களுடன் சண்டையிடாமல், மிகவும் சாதுரியமாக செயல்பட்டுள்ளார்.
El empleado con el IQ más alto de New York. Los dejó que robaran y después los dejó a ambos encerrados y llorando pic.twitter.com/acZnu2LGzk
— Juan Domingo Underwood (@Ojo_Kritico) June 18, 2026
அவர்கள் திருடுவதை தடுத்த நிறுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு, சத்தமில்லாமல் நைசாக கடையை விட்டு வெளியேறியுள்ளார். திருடர்கள் இருவரும் கடையை கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்த நேரத்தில், ஊழியர் டக்குன்னு கடையின் வெளிப்புற கதவை பூட்டி அவர்களை உள்ளேயே சிறை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டு கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்பொழுது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.
