ஒடிசா மாநிலம் மல்காங்கிரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கிருந்த மருத்துவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பாம்பு கடியின் காரணமாக கடுமையான உடல்நலக்குறைவுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் சில சமூக விரோதிகள், சிகிச்சையில் குறைபாடு இருந்ததாகக் கூறி அங்கிருந்த மருத்துவர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் (CMO) மற்றும் ஒடிசா காவல்துறைக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக மருத்துவர்கள் சங்கத்தினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
A doctor was brutally assaulted after the death of woman in Malkangiri Odisha due to an alleged snake bite.
We request the @CMO_Odisha @odisha_police to put these goons behind bars and ensure strict protection for doctors.@GovernorOdisha @DrDhruvchauhan pic.twitter.com/jIxG55eULw— Dr Mohammad Momin Khan (@DrMohammadMomin) June 17, 2026
மருத்துவரை தாக்கிய குண்டர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
