சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.