லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிகர் சஞ்சய் தத்  உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி நிலையில் காலை 9 மணி முதல் தொடங்கி இரவு 12:30 மணி வரை திரையிடலாம் என அறிவிக்கப்பட்டது .இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி லியோ படத்திற்கு பல கட்டுப்பாடுகளில் விதித்துள்ளார்.

அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் மட்டும் சிறப்பு காட்சி திரை இடுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொடக்க காட்சி காலை 9 மணிக்கு கடைசி காட்சி அதிகாலை 1.30 மணி அளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்திருக்க வேண்டும். திரைப்படம் பார்ப்போரின் வாகனங்கள் உள்ளே நுழைதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத விதமாக காவல்துறையினர் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.