தமிழகத்தில் ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தம் அடையக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாய கல்வியை வழங்கிட சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதனைப் போலவே மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவி தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.