இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பேசியுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தான் அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.