சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770 வீதம் 52 வாரங்களில் தவணையாக பணத்தை திரும்ப தருவதாக கூறி கடன் பெற்றுள்ளார். இவர் கடன் தொகையை சரியாக கட்டி வந்த நிலையில் அவருடைய மனைவி கௌரிக்கு திடீரென உடல்நல பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2 வாரங்களாக தவணை பணத்தை கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர் சுபா என்பவர் பிரசாந்தை தொடர்புகொண்டுள்ளார்.

இதனால் சுபா பிரசாந்தின் வீட்டிற்கு சென்று அங்கு நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். ஆனால் அவர் அங்கு வராததால் அவருடைய மனைவி கௌரியை வங்கிக்கு அழைத்துச் சென்று விட்டார். பணத்தை கொடுத்து விட்டு அவருடைய மனைவியை அழைத்து செல்லட்டும் என்று சுபா அவரை அழைத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக பிரசாந்தின் நண்பர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவர் இரண்டு வார தவணை பணத்துடன் சென்று தன் மனைவியை மீட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பிரசாந்த் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரியின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.