தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், துணிச்சலை பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இங்க சொல்லி அவையின் மரபை  மீற  வேண்டிய அவசியம் இல்ல. உறுதியாக பலமுறை காவேரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்திலே குரல் எழுப்பி இருக்கிறோம். பல முறை அவை நடக்க முடியாத அளவிற்கு செஞ்சிருக்கிறோம்.

நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். எத்தனையோ பரிசீலனையை  வச்சி செஞ்சிருக்கிறோம். அதுஎல்லாம் ஆதாரங்கள் இருக்குது.   சட்டமன்றத்துல நாங்க எல்லாம் இதனை நிறை வேற்றணும்ங்குறதுக்காக அமைதியா உட்காந்து இருக்கோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா ?  என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்குது . ஏன் தண்ணி திறந்து விட மாட்டேங்குறாங்க ?  என் கர்நாடக அரசை பேச மாட்டேங்குறாரு? பயமா ? கூட்டணி உடைந்து போயிடுமா? முதலமைச்சர் பேசுறாரு…  நாங்கள் தான் குரல் கொடுத்தோம் என்கிறார்…. 

ஜூன் மாதத்தில் ஒரு எம்பி பேசி இருக்காரு.. மேகதாது பத்தி பேசி இருக்காரு… இன்னொரு எம்பி ஜூலைல பேசி இருக்கிறார்… அதுவும் பயிர் காப்பீடு திட்டம் பற்றி தான் பேசி இருக்காரு.. இந்த தண்ணி பத்தியே பேசல. ஏன் தண்ணி பத்தி பேசல? இந்த இரண்டு மாத காலமாக நான் கோரிக்கை வச்சுக்கிட்டே இருக்கேன். எதிர்க்கட்சி என்கின்ற முறையில…. மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.