செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா  திமுக ஆட்சியில்  காவிரி நதிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது சட்டத்துறை அமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, தாங்கி லொள்ள முடியவில்லை.  அதனால் நாங்க பிஜேபிக்கு பி டீம்ன்னு சொல்லுறாங்க. ஊடகத்தின் வாயிலாக பாத்தீங்களா…. இதை பொதுமக்கள் பார்த்து தீர்ப்பு கொடுக்கட்டும். விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்,  டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக வழங்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கின்றார்கள். தமிழ்நாட்டினுடைய உரிமைகளை பாதுகாக்க…. நம்மளுடைய விவசாயிகள் உடைய குரல் நாடாளுமன்றத்திலே தொடர்ந்து 21 நாள்கள் ஒலித்து ஒத்திவைக்கப்பட்டது. ஒத்தி வைப்பது மட்டுமல்ல,  நாடு இது முழுவதும் பரவியது.

அதனால்தான் மத்திய அரசாங்கம் விரைந்து,  காவிரி மேலாண்மை வாரியதுக்குள்ள,  ஆணையம் அமைச்சாங்க. காவிரி நீர் முறைப்படுத்து குழு அமைச்சாங்க. இது வரலாறு. இது அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் விவரம் தெரிந்தவர்கள். யார் காவேரி நதிநீர் பெற்று தந்தார்கள் என்று அவர்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.