விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. லாரியின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த தேவ விருதன் உயிரிழந்தான். தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.