கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (34) என்பது தெரியவந்தது.

பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சதீஷை முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர்கள் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.