அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அதனை 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததை அடுத்து ஜாமீன் கோரி,

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்றைய தினம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம். ஆர் இளங்கோ ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.அதே போல மத்திய அரசின் வழக்கறிஞர்  வாதத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.