செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்தார் விருந்துல கூட நான் சொன்னேன்…. இஸ்லாமியர்கள் வாக்கை வாங்குவதற்காக உங்க மத அடையாளத்தை போடா மாட்டேங்க…. என்னுடைய மத அடையாளத்துல நீங்களும் வாங்க,  சமமாக அமருவோம். அப்படிங்குறது தான் பாரதிய ஜனதா கட்சியோட சமத்துவ கொள்கை. இன்னொரு கட்சியினுடைய அடையாளத்தை நான் போட்டு தான்.. அந்த ஒரே ஒரு நாள் போட்டு தான்…..  அதன் மூலமாக இஸ்லாமியர்களுக்கு நண்பன்னா…..  அது போய் என  இஸ்லாமியர்களுக்கு தெரியும்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உண்மையாக இருக்கிறோம். யாருக்கும் அநியாயம் பண்ணல. யாராச்சும் ஒரு இடத்துல தலைவர்கள் தவறாக பேசுனா கூட கூப்பிட்டு,  கண்டிச்சி அதையும் சரி பண்ணிருக்கோம். எங்களை பொறுத்தவரை சிறுபான்மை வாக்கு  ,பெரும்பான்மை வாக்கு இல்லை. எல்லா வாக்கும் சமமான வாக்கு. எல்லா வாக்குக்கும் இருக்க கூடிய மரியாதை சமம்.

அதற்காக தான் கட்சி நடத்துறோம். பாகுபாடு காட்டி ஒரு கட்சி  நடத்த முடியாது. பாகுபாடு காட்டி செயல்பட்டால் அந்த கட்சியே  இருக்காது. இந்த கட்சி யாருக்கும் பாகுபாடு காட்டாது. பாகுபாடு பார்க்கவும் மாட்டோம். வருகின்ற காலத்துல நீங்க பாப்பிங்க…   தவறுகளை சுட்டிக்காட்டுங்க. நான் சிறுபான்மை பத்தி தப்பா பேசுனீங்க என இருக்கவே இருக்காது . நான் சிறுபான்மையினரை அரவணைக்க வில்லை, இருக்கவே இருக்காது. அந்த மாதிரி குற்றம் சுமத்துங்க. எதிர்க்கட்சிகள் சொல்லலாம்… எங்களை பொறுத்த வரை நிச்சயமா அது மாதிரி கிடையாது என தெரிவித்தார்.