அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம்  14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததையடுத்து, தமக்கு  ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்றைய தினம் நீதிபதி ஜீ. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், இந்த ஜாமீன் மனுவை மெரிட் அடிப்படையில்…  தகுதியின் அடிப்படையில் வாதிட வில்லை எனவும், முழுக்க முழுக்க மருத்துவ காரணங்களை அடிப்படையாக வைத்து வாதிட உள்ளதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சட்டவிரோத பனபரிமாற்ற தடை சட்டத்தில் 45 வது பிரிவு பொருந்தாது.

கைது செய்யப்பட்ட அன்றே உடல்நிலை சரியில்லாததால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ஆட்கொணர்வு மனு மீதான நீதிமன்ற உத்தரவை,  இந்த பதில் மனு மீது அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது ஏன் எனவும், அதேபோல தனது சகோதரர் அசோக்-கை ஏன் இதில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று  தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கையும்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என அமலாக்கத்துறை கூறுகிறது. ஆனால் அவருடைய தற்போதைய உடல் நிலையில் அது சாத்தியம் இல்லை என்றும், நீதி மன்றமே எந்த ஒரு மருத்துவரையாவது நியமித்து,  செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து கொள்ளட்டும் என  தெரிவித்தார்.

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசினுடைய கூடுதல் ஜொலிஸ்டல் ஜெனரல்  சுந்தரேசன், சிறை  மருத்துவமனையிலேயோ அல்லது நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமின்  வழங்க முடியும் எனவும், ஆனால் அது போன்ற எந்த நிலையிலும்  செந்தில் பாலாஜி இல்லை எனவும் தெரிவித்தார்.

ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் உட்காரவோ,  நிற்கவோ  முடியவில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும் என அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார். செந்தில் பாலாஜினுடைய மருத்துவ அறிக்கை என்பது மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரும் பிரிவின் கீழ் வரவில்லை எனவும்,  இதே காரணத்தை தான் முதன்மை அமருமாறு நீதிமன்றத்தில் கூறினார்கள் ஆனால் அதனை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும்  கூறினார்கள். ஆனால் அதை முதண்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் செந்தில் பாலாஜியினுடைய உடல்நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் அனைத்து துறை மருத்துவர்கள் அளித்துள்ள கருத்துக்களும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும்,  அந்த மருத்து அறிக்கையின்படியே செந்தில்பாலாஜி வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை எனவும், மேலும் ஜாமினில் வெளிய வந்தால் செந்தில் பாலாஜி ஆதாரங்களை கலைப்பார். வழக்கு பலவீனமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு  1.35 கோடி ரூபாய் மட்டும் சம்பந்தப்படவில்லை. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் உள்ள ஆவணங்களின்படி,  சுமார் 67 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணமிருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கதுறை சார்பில் தெரிவித்தது.

இதையடுத்து  நீதிபதி கேள்விகள் எழுப்பினார். அப்போது செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா ? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் அவர் வெளியில் வந்து சாட்சியை கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது, அதற்கு உங்களது பதில் என்ன என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ அவர்கள்,  நிச்சயமாக ஆதாரங்களை செந்தில் பாலாஜி கலைக்க மாட்டார் எனவும், ஆதாரங்களை கலைப்பதற்கான முயற்சியில் கூட அவர் ஈடுபட மாட்டார் எனவும்,  வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே அமலாக்கத்துறையிடம் உள்ள போது எப்படி அவரால் ஆதாரங்களை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதய அறுவை சிகிச்சை சாதாரணமானது என அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தாலும் இதே போல் தான் கூறுவார்களா ? என்ற ஒரு கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பது அமலாக்க துறையால் நிரூபிக்க முடியாது எனவும்,  செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். இதன அடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் உடைய தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் ஒத்தி வைத்திருக்கிறார்