சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ‌ ரஹானே இருவரும் களமிறங்கினர். இதில் ருதுராஜ் அரைச்சதம் எடுத்த நிலையில் ரகானே 29 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய சிவம் துபே ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டான நிலையில், ஜடேஜா 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்ததாக இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரிஷ்வி 21 ரன்களில் ஆட்டமிழக்க, மொயின் அலி 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து 18-வது ஓவரில் எம்.எஸ் தோனி களம் இறங்கினார். 11 பந்துகளை எதிர்கொண்ட தோனி 14 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தில் எம்‌.எஸ் தோனி ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக தனது விக்கெட்டை தோனி இழந்துள்ளார். சென்னை அணி போட்டியின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. மேலும் அடுத்ததாக களம் இறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.