நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ் சிங் துபாயில் வசித்து வந்தார்.

அவர் சென்னைக்கு திரும்பிய போது சிபிசிஐடி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.