பஞ்சாப் அல்லது ஹரியானா பகுதியில் ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவருடன் விவசாயிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் விவசாயிகள் அமர்ந்திருந்த நிலையில், அதைக் கேள்வி கேட்ட பெண்ணிடம் அவர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் “வீடியோ எடுப்பதை நிறுத்து, இது ஒன்றும் உன்னுடைய தனிப்பட்ட இருக்கை கிடையாது” என்று மிரட்டும் தொனியில் விவசாயிகள் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூகப் போராட்டங்களில் முன்னிற்கும் விவசாயிகள், பொது இடங்களில் ஒரு பெண்ணிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இதனால் சட்டத்தை மதிக்காமல் தங்களது செல்வாக்கை ரயிலிலும் காட்ட முயன்ற இவர்களின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறை இது குறித்து உரிய விசாரணை நடத்தி, அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.