மேகதாது அணை விவகாரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தமிழகத்திற்கு எதிராகக் கூட்டுச் சதி செய்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்தச் செயலைத் தட்டிக் கேட்டால், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சண்டைக்கப் போவது போல ஆவேசமாகக் கொந்தளிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கும் வகையில் இரு தேசியக் கட்சிகளும் கைகோர்த்துச் செயல்படுவதை யாராலும் மறைக்க முடியாது என்றார்.
இந்த உண்மையைச் சுட்டிக்காட்டிப் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் தரப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் சட்டையை மடித்துக்கொண்டு ஆவேசமாக வந்து நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், பாமக எதற்கும் அஞ்சாது என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்; எங்களது அரசியல் எப்போதும் அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான பாதையில்தான் பயணிக்கும்” என்று அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூருக்கு அன்புமணி பதில்!#AnbumaniRamadoss | #PMK | #ManickamTagore | #Congress | #Tamilnadu | #Politics pic.twitter.com/dhsp8InLGF
— News7 Tamil (@news7tamil) July 29, 2026
“>
காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களை மையமாகக் கொண்டு பாமக தரப்பு விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு அனலைப் பற்றவைத்துள்ளது.
