காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் தமிழகம் பெரும் பாலைவனமாக மாறக்கூடும் என்று நீர்வளத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான துரைமுருகன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் விவசாயிகள் நலன் காக்கும் விவகாரத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், மாநிலத்தின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதங்களைக் மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீரை முழுமையாகப் பெறத் தேவையான கூட்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
DMK leader and Tamil Nadu Water Resources Minister S. Duraimurugan urged all political parties to unite on the Cauvery water dispute, warning that the State risks turning into a desert if its rightful share of water is not secured.
He stressed that safeguarding Tamil Nadu’s… pic.twitter.com/76jtuJs528
— The Pioneer (@TheDailyPioneer) July 29, 2026
“>
மாநிலத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற அமைச்சரின் இந்த அழைப்பு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
