உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அவர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும், செல்போனில் அழைத்தும் அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர், தனது மனைவிக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டதாகக் கருதி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
View this post on Instagram
“>
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அந்தப் பெண் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் “நான் வெறும் காய்கறி வாங்கத்தான் சென்றேன், அதற்குள் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை” என அந்த நபர் கண்ணீருடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அற்ப காரணங்களுக்காக தற்கொலை போன்ற முடிவுகளை எடுப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
