உத்தரப்பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் பயிலும் இந்து மாணவி ஒருவரை, அவரது தோழிகளான முஸ்லிம் மாணவிகள் சிலர் வலுக்கட்டாயமாக ஹிஜாப் அணிய வற்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அம்மாணவி ஹிஜாப் அணிய மறுத்த போதிலும், அவரது நண்பர்கள் அவரைத் தொடர்ந்து வற்புறுத்துவதும், மதம் சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
भाई इतना भी सेक्युलरिज्म ठीक नहीं है उत्तर प्रदेश के मोरहाबाद में कोचिंग क्लास से लौटते समय एक हिंदू लड़की पर कथित तौर पर उसके मुस्लिम क्लासमेट्स ने बुर्का पहनने का दबाव डाला और उसे बुर्का पहनाया।
वीडियो वायरल है पुलिस जांच कर रही है आखिर क्या मामला है? pic.twitter.com/caqi4xiuw6
— Anuj Agnihotri Swatntra (@ASwatntra) January 16, 2026
“>
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ‘லவ் ஜிஹாத்’ மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இது போன்ற செயல்கள் நடப்பதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி நிலையங்களில் இது போன்ற மத ரீதியான அழுத்தங்கள் மாணவர்களிடையே பிரிவினையை உண்டாக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
