வடக்கு பெங்களூருவில் சிறுவர்கள் போல வேடமிட்டு தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக ஆண்களைப் போலவும், குறிப்பாக இளம் சிறுவர்களைப் போலவும் உடை அணிந்து பூட்டியிருக்கும் வீடுகளைக் குறியாக வைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொண்டு இவர்கள் கைவரிசை காட்டி வந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்த திருட்டு குறித்த விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு இவர்களின் விசித்திரமான செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுந்தது.

“>

இது தொடர் விசாரணையில், கைதான பெண்கள் இருவரும் பல்வேறு இடங்களில் நகை மற்றும் பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களைப் போலீசார் மீட்டெடுத்துள்ளனர். பொதுவாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரங்களிலேயே இந்த நூதனத் திருட்டு அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்நிய நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.