திரைப்படங்களில் வருவது போல கிராமம் ஒன்றே காணாமல் போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மலைகளே முழுமையாகக் காணாமல் போயுள்ளதாகக் கனிம வளத்துறை அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.

மலைகள் இருந்த இடமே இப்போது அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலுமாக மாறிவிட்டதாக அவர் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சட்டவிரோத கனிம வளக் கொள்ளை மற்றும் மணல் அள்ளப்பட்டதன் காரணமாக இந்த மலைகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தரவுகள், தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் பாதிப்பு மற்றும் கனிம வளக் கொள்ளை குறித்த இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

“>

 

இதுகுறித்துத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.