அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரங்களும், அது தொடர்பான விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் 1700-களில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘Ulysses Nardin’ பிராண்டைச் சேர்ந்த இந்த நவீன ரக கைக்கடிகாரம், கடல்வழிப் பயணங்களில் திசையைக் கண்டறியப் பயன்படும் ‘மரரைன் க்ரோனோமீட்டர்’ தொழில்நுட்பத்தின் நவீன வடிவமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆடம்பர வாட்ச்சின் சந்தை மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, அரசு சார்பில் கார் பரிசு வழங்குவது குறித்து விமர்சித்தவர்களைச் சுட்டிக்காட்டும் வகையிலும், தலைவர்களின் சொத்து மற்றும் ஆடம்பரப் பொருட்கள் குறித்த கேள்விகளை எழுப்பும் வகையிலும் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அன்பில் மகேஷ் கட்டிருக்க வாட்ச் பேரு Ulysses Nardin..
இந்த Brand ( 1700 Something-ல ஸ்விட்சர்லாந்துல ஆரம்பிக்கப்பட்டது,
இது ஆரம்பத்துல marine chronometers-னு சொல்வாங்க,
ஒரு கப்பல் போகும் போது அது எந்த இடத்தில் இருக்குனு துல்லியமா கண்டுபிடிக்க nautical history… pic.twitter.com/EJYcoVArZ2
— 🅰NU 🅱rizzLina (@Its__Anu) August 26, 2026
“>
அரசியலில் இது போன்ற விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் பொதுவெளியில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
