சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிரடியாக 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்தத் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முழுமையான மேற்பார்வைப் பொறுப்பை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தலைமை தாங்கி கவனிப்பார். இவருடன் இணைந்து சென்னையின் பல்வேறு மண்டலங்களைக் கண்காணிக்கச் சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிக்கு ரமேஷ், மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டைக்கு லோகேஷ், இராயபுரம் மற்றும் திரு.வி.க. நகருக்கு அருண்ராஜ் பொறுப்பேற்கின்றனர்.
TVK appoints 8 ministers as in-charge for Chennai City to monitor development works and flood preparedness.
Highways minister Aadhav Arjuna will head the entire district supervision.
The other ministers are as follows:
Thiruvottiyur and Manali – Ramesh
Madhavaram and… pic.twitter.com/vYlhuc6GdL
— Omjasvin M D (@omjasvinMD) August 26, 2026
“>
மேலும், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டைக்கு விஜய் பாலாஜி, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கத்திற்கு டி.கே. பிரபு, ஆலந்தூர் மற்றும் அடையாறுக்கு விஜய் பார்த்திபன், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூருக்கு கே. விக்னேஷ் ஆகியோர் தனித்தனி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு களப்பணியில் இறங்கியுள்ளனர்.
