தமிழகத்தில் தொழில்துறையை மேலும் பலமடங்கு வளர்க்கும் நோக்கில் மாநில அரசு பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக சுமார் 14,840 ஏக்கர் நிலப்பரப்பில் 30 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, மேலும் 44 புதிய தொழில் பூங்காக்களை சுமார் 33,648 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவும் விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“>

 

குறிப்பாக மநல்லூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் பகுதிகளில் நவீன மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு மையங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்தத் தொழில் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது, தமிழக இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.