அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தன்னுடைய கோபி எம்எல்ஏ பதவியை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா செய்துள்ளார். நாளை அவர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் தற்போது கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக திமுக அமைச்சர் முத்துசாமியை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் நாளை தமிழக வெற்றிக்கழகத் இணைவது உறுதி என்று கூறப்படுகிறது.
இது பற்றி செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஒருநாள் பொறுத்திருங்கள் என்று கூறினார். செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என நான்கு முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர். இதன் காரணமாகவே செங்கோட்டையனை நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தில் இணைய அழைத்ததாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன்தான் அடுத்த முதல்வர் என்று கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
இதனால் கோபி தொகுதியில் செல்வாக்கு மிக்க செங்கோட்டையனை தங்கள் பக்கம் விஜய் இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக வந்த செய்திக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவிக்காமல் ஒருநாள் பொறுத்திருங்கள் என்று கூறியதால் அவர் கிட்டத்தட்ட இணைவது உறுதி ஆகிவிட்டது. மேலும் முன்னதாக அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர வேண்டும் என செங்கோட்டையன் கூறியதாவது அவர் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
