ரயில் நிலையம் ஒன்றில் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வயதான முதியவர் ஒருவர் மீது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் பெல்டால் தாக்குதல் நடத்தியுள்ளார். பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயலின் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ​

அடி தாங்க முடியாமல் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த அந்த முதியவர், தன்னை பெல்டால் அடித்த இளைஞரைத் தான் நடப்பதற்காக வைத்திருந்த கைத்தடியை எடுத்துத் திருப்பித் தாக்க முயற்சிக்கிறார். இருப்பினும், அந்த வாலிபர் சற்றும் இரக்கமில்லாமல் தொடர்ந்து அந்த முதியவரை பெல்டால் மீண்டும் மீண்டும் அடிக்க முயற்சிக்கிறார்.

வீடியோவை காண

முதியவர் என்றும் பாராமல் பொது இடத்தில் அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் ஆத்திரமடையச் செய்துள்ளதுடன், அந்த இளைஞனை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.