அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவான செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் நாளை இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் இன்று சென்னைக்கு வந்தடைந்த நிலையில் தற்போது சபாநாயகரை நேரில் சந்தித்து தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். நாளை அவர் விஜய் முன்னிலையில் அவருடைய கட்சியில் இணைய இருப்பதால் தற்போது கோபி எம்எல்ஏ பதியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போகிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு நாள் பொறுத்திருங்கள் என்று அவர் பதில் வழங்கியதால் கிட்டத்தட்ட அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது உறுதியாகிவிட்டது.
