பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரைத் தாக்கித் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நசீப் சிங் என்ற அந்தக் கைதி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர். சனிக்கிழமையன்று போலீஸ் காவலர் ஜஸ்தீப் சிங்குடன் ஈ-ரிக்ஷாவில் சிறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நசீப் சிங் திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் காவலரைத் தாக்கினார்.
கயிற்றால் கைகள் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்த நிலையிலும், இருவரும் நடுரோட்டில் விழுந்து பாலிவுட் சினிமா பாணியில் பயங்கரமாக சண்டையிட்டனர். இந்த மோதலின் போது, காவலரின் துப்பாக்கியைப் பறிக்கவும் கைதி முயன்றார்.
இந்தக் கடுமையான போராட்டத்தின் போது, துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்ததில் கைதி நசீப் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகத்திலும் உடலிலும் பலத்த காயமடைந்த காவலர் ஜஸ்தீப் சிங் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Terrifying.
In Hoshiarpur, Punjab, a prisoner attacked the police.
An encounter took place with the prisoner in self-defense. pic.twitter.com/pNJzbAON3l
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 17, 2026
“>
கைதிக்குக் கூர்மையான ஆயுதம் எப்படிக் கிடைத்தது, யாராவது வெளியில் இருந்து உதவி செய்தார்களா என்பது குறித்து விசாரிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சண்டையின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
