பஞ்சாப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சியுள்ளார்.
“இந்தச் சிறிய தள்ளுவண்டியும் காஸ் சிலிண்டரும்தான் என் குடும்பத்தின் வாழ்வாதாரம்; இதைப் பறித்துக்கொண்டால் என் குழந்தைகளுக்குச் சோறு போடக்கூட வழியில்லாமல் போய்விடும்” என்று அவர் கதறிய காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நகராட்சி அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்வதாகக் கூறினாலும், இது போன்ற நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
View this post on Instagram
“>
நகரத்தின் ஒழுங்குமுறை ஒருபுறம் அவசியம் என்றாலும், மறுபுறம் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் கேள்விக்குறியாவதை இந்த வீடியோ வேதனையுடன் பதிவு செய்துள்ளது.
