இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதற்காக அவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் குத்துச்சண்டை (பாக்சிங்) போன்ற விளையாட்டுகளிலும் ரோபோக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ஒரு பயிற்சியாளர் ஒரு ரோபோட்டுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தப் பயிற்சியின் போது வேடிக்கையான ஒரு சம்பவம் நடக்கிறது.
காணொளியில், பயிற்சியாளர் ஒரு ரோபோட்டுக்கு பயிற்சி கொடுக்கும்போது, மற்றொரு ரோபோட் அவரை நோக்கி வருகிறது. அப்போது பயிற்சியாளர் அந்த ரோபோட்டை தள்ளிவிடுகிறார். ஆனால், தள்ளிவிடப்பட்ட அந்த ரோபோட், பின்னால் இருந்து வந்து பயிற்சியாளரை ஒரு பன்ச் மூலம் தாக்குகிறது. இந்த வேடிக்கையான காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
