பக்கவாட்டு கீழ் இருக்கை என்பது ரயிலில் பயணிக்கிற அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமாகும். அந்த இடத்தில் அமர விரும்பும் மக்கள் பலர் இடமாற்றம் பேசுவதும், பரிமாறிக் கொள்ள முற்படுவதும் சாதாரணம். ஆனால், பெங்களூரு – கேரளா இடையே ரயிலில் பயணம் செய்த ஒரு இளைஞர், தனது முன்பதிவுச் செய்யப்பட்ட பக்கவாட்டு இருக்கையை யாரிடமும் இழக்காமல், சற்றும் கோபிக்காமல், புத்திசாலித்தனமாக காத்துக்கொண்ட சம்பவம் இப்போது வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் தனது ரெடிட் பதிவில், இரவு 12 மணிக்கு சுமார் 30 வயதுள்ள ஜோடி ரயிலில் ஏறியதையும், அவர்களில் ஒருவர் நேரடியாக “நீ மேல போ தம்பி” என்று கட்டளை விட்டதையும் பகிர்ந்துள்ளார். ஆனால், உடனடியாக அந்த இளைஞர், “எனக்கு உடல்நிலை சரியில்லை… வாந்தி எடுத்தால் கீழே இறங்க முடியாது” என்று நிதானமாக பதிலளித்துள்ளார். இதனால், எந்த வாதமும் இல்லாமல் அந்த பெண்மணி மேல் பெர்த்திற்கு சென்றுவிட்டார்.

Rant :: Successfully Defended seat change request in the middle of night
byu/Zealousideal-Ad-4902 inindianrailways

“பயணத்துக்கு முன் பிளான் பண்ணி, அதுக்கேத்த மாதிரி பதில் சொல்லணும்… இல்லனா நம்ம இருக்கையே போயிடும்” என்று கூறும் அவரது அனுபவம், சமூக வலைதளங்களில் ‘சரியான மூளைபயன்பாடு’ என பெரிதும் பாராட்டப்படுகிறது. பலரும் இதுபோன்ற சூழ்நிலைகளில் தாங்களும் இப்படியே எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். “சற்றே யோசித்து பதில் சொன்னால், சாதாரண இடம் கூட பெருசாக தக்க வைக்க முடியும்!” எனும் கருத்துகள் வலம்வருகின்றன.