பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷகீப் மியா என்பவரை 11 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களுக்குக் குழந்தை ஒன்றும் பிறந்துள்ள நிலையில், குடும்பத்தினருக்கும் இளம் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகப் பிரச்சினை பெரிதாகியுள்ளது. கணவரும் அவரது தாயாரும் சேர்ந்து அந்தப் பச்சிளம் குழந்தையைத் தாயிடமிருந்து வலுக்கட்டயமாகப் பறித்துக்கொண்டு, சிறுமியை வீட்டைவிட்டும் துரத்தியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
தனது 13 ஆவது வயதிலேயே சொந்தக் குழந்தையைப் பிரிந்து தவித்த அந்த இளம் தாய், நீதி கேட்டுத் தாராள மனதுடன் உதவக்கூடிய சட்ட உதவி அலுவலகத்தை (Legal Aid Office) நாடியுள்ளார். கணவரின் குடும்பத்தினரின் அத்துமீறலுக்கு எதிராக அவர் மேற்கொண்ட இந்தத் தைரியமான முயற்சி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சிறுமியின் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கைத் தீவிரமாக விசாரித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தாய்க்கு நியாயம் வழங்கத் தயாராகினர்.
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை அன்று அதிரடித் தீர்ப்பு வழங்கிய டாக்கா சட்ட உதவி அலுவலர் முகம்மது சாயம் கான், குழந்தையை உடனடியாகத் தாயிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்தப் பச்சிளம் குழந்தை தொடர்ந்து தனது இளம் தாயின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாகக் குழந்தையைப் பிரிந்து தவித்த அந்த இளம் தாய் தனது மகனுடன் வெற்றிகரமாக மீண்டும் இணைந்து கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
