இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபர் நான்கு கால்களுடன் நடந்து வருகிறார். பின்னர், அவர் ஒரு பார்வையாளரின் அருகே சென்று, அவரைப் போலவே கால் மீது கால் போட்டு அமர்கிறார். ஆனால், வித்தியாசமாக, இந்த நபர் தனது நான்கு கால்களையும் ஒரு கால் மீது ஒரு கால் என அழகாகப் போட்டு அமர்கிறார்.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி, நெட்டிசன்களுக்கு யார்டா இது நாலு கால்களுடன் என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
