சமூக வலைதளங்களில் குழந்தைகளின் குறும்புகள் மட்டுமல்ல, அவர்களின் அற்புதமான திறமைகளும் அவ்வப்போது காணொளிகளாக வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி, ஒரு சிறு குழந்தையின் அசாதாரண திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இந்த காணொளியில், ஒரு குட்டி குழந்தை மிகவும் திறமையாகவும், அழகாகவும் ஸ்கேட்போர்டில் விளையாடுகிறது.
இந்த காணொளி வெளியான சில நாட்களிலேயே 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதையடுத்து சமூக வலைதள பயனர்கள் இந்த குழந்தையின் திறமையைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
