“ஐயோ பாவம்ப்பா.. இந்த அடைமழையில ஒண்ணுமறியாத ரெண்டு சின்னக் குழந்தைங்க இப்படி நடுரோட்டுல நின்னு பழம் வித்துக்கிட்டு இருக்காங்களே , அவங்க மொத்தப் பழத்தையும் நானே வாங்கிக்கிறேன் !”

என்று ஸ்பெயின் நாட்டுச் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஓடிவந்த அந்த மனிதர்  நெகிழ்ச்சிச் சம்பவம், தற்பொழுது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களை அடியோடு ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முக்கியச் சாலை ஒன்றில் பெய்து வரும் கனமழையிலும் தங்களை அறியாமல் நனைந்தபடி, வயிற்றுப் பிழைப்புக்காக இரு சிறு குழந்தைகள் சாலையோரம் அமர்ந்து பழங்களை விற்று வந்த சோகக் காட்சியைக் கண்ட அந்த நபர், உடனடியாகத் தனது காரை நிறுத்திவிட்டு அவர்களிடம் இருந்த ஒட்டுமொத்தப் பழங்களையும்  வேகத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்;

அதுமட்டுமன்றி, அப்பழங்களின் அசல் விலையை விடப் பல மடங்கு கூடுதல் தொகையைப் பணமாகக் கொடுத்து, அக்குழந்தைகளின் வாடிய முகத்தில்  புன்னகையை வரவழைத்த அந்த மனிதாபிமானக் காட்சி பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

மனிதநேயத்திற்கு எந்தவொரு மதமும் தேவையில்லை, மாறாக மனிதாபிமானம் தான் உலகின் ஒவ்வொரு மதத்திற்கும் மிக அழகான அடையாளம் என்பதை உலகிற்கு உணர்த்திய இந்த நெகிழ்ச்சியான வீடியோ # தற்பொழுது இணையத்தில்  பேசுபொருளாக மாறியுள்ளது.

“>