கர்நாடகாவின் புகழ்பெற்ற மாலே மகாதேஸ்வர மலைப் பகுதியில், அமாவாசை தரிசனத்திற்காக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டுவிட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பை மேட்டில், பசியால் வாடிய காட்டு யானை ஒன்று தும்பிக்கையை விட்டு உணவு தேடும் நெஞ்சை உலுக்கும் காணொளி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் கோப அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் ‘பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், வனவிலங்கு சரணாலய எல்லைப் பகுதியில் பக்தர்கள் வீசிச் சென்றுள்ள பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு இடையே அந்த அப்பாவி யானைஉணவைத் தேடி அலைகிறது.

மனிதர்களின் இந்த அலட்சியமான செயலால், உணவின் வாசனைக்காக வரும் காட்டு யானைகள் பிளாஸ்டிக்கை அப்படியே விழுங்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக விலங்குப் பிரியர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

<a href=”http://

“>

“பக்தியின் பெயரால் மனிதன் இயற்கையின் கழுத்தை நெரிக்கிறான்” என்று நெட்டிசன்கள் உருகிப் பாராட்டி வரும் நிலையில், புனித யாத்திரை தலங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுபவர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்பொழுது வலுத்து வருகிறது.