உத்தரகாண்ட் மாநிலத்தில் தந்திர வித்தைகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஒரு விவசாயியிடம் மௌலானா ஒருவர் ₹1.80 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி தனது நிலத்தை விற்றதன் மூலமும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் இந்த பெரும் தொகையைச் சேர்த்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மௌலானா மற்றும் அவரது கூட்டாளிகள், நோட்டுக் கட்டுகளின் மீது சிறப்பு தந்திர அல்லது மாந்திரீக பூசைகள் செய்வது போன்ற ஒரு வீடியோவை விவசாயிக்கு அனுப்பி நம்ப வைத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் நிலையில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விவசாயியின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் தலைமறைவாக உள்ள மௌலானா மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறது. மேலும், பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றும் இது போன்ற போலி மாந்திரீகவாதிகள் மற்றும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், பண விஷயங்களில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் காவல்துறை எச்சரித்துள்ளது.