ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் ஆகியோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விழா மேடையில் அமைச்சர்கள் அமர்ந்திருந்தபோது, அங்கு பணிபுரியும் பெண் செவிலியர் ஒருவர் திடீரென தனது பணியிட மாறுதல் (Transfer) கோரிக்கையை முன்வைத்து சுகாதாரத் துறை அமைச்சரை நோக்கி ஓடிவந்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக, தனக்கு எப்படியாவது இடமாற்றம் பெற்றுத் தருமாறு கோரி அந்தப் பெண் செவிலியர் அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் மல்கக் கதறி அழுதார். செவிலியரின் இந்தத் திடீர் செயலால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு நிமிடம் பெரும் பரபரப்பு நிலவியது.
ट्रांसफर की गुहार लगाते-लगाते चिकित्सा मंत्री के पैर पकड़कर रोने पर मजबूर हो गई नर्स।
जोधपुर में चिकित्सा मंत्री गजेंद्र सिंह खींवसर के दौरे के दौरान एक नर्स ट्रांसफर की मांग को लेकर पहुंची।
वह मंत्री के पैर पकड़कर भावुक होकर गुहार लगाने लगी। क्यूंकि
चिकित्सा विभाग में… pic.twitter.com/hjvWOyhHUA
— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) June 21, 2026
அமைச்சரின் காலில் விழுந்து அழுத பெண் செவிலியரின் நிலையைப் பார்த்த மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரைத் தேற்றினர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அந்தப் பெண் செவிலியருக்கு உடனடியாக ஆறுதல் கூறி, அவரது கோரிக்கையை கனிவோடு கேட்டறிந்தார்.
மேலும், செவிலியரின் இடமாற்றப் பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி, அவரது நியாயமான கோரிக்கைக்கு மிக விரைவில் தீர்வு காணப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று விழா மேடையிலேயே மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.
